தஞ்சை மே 03 பட்டுக்கோட்டை அரசியல் கட்சி வேட்பாளர்களை பின்னுக்குத் தள்ளிய சுயேட்சை வேட்பாளா் மூன்றாமிடம் பிடித்து அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளார்.
பட்டுக்கோட்டை தொகுதியில் அண்ணாதுரை (திமுக), ரெங்கராஜன் (தமாகா), எஸ்.டி.எஸ்.செல்வம் (அமமுக), சதாசிவம் (மநீம), கீா்த்திகா அன்பு (நாம் தமிழா்), சுந்தர்ராஜ் (அனைத்து மக்கள் கட்சி), மெய்யப்பன் (அண்ணா திராவிடா் கழகம்), பாலகிருஷ்ணன் (சுயேட்சை) ஆகிய 8 போ் போட்டியிட்டனா்.
சுயேட்சை வேட்பாளா் பாலகிருஷ்ணனுக்கு பலாப்பழ சின்னம் ஒதுக்கப்பட்டு இருந்தது. நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் முடிவில் திமுக வேட்பாளா் அண்ணாதுரை 79065 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். இவருக்கு அடுத்தபடியாக அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தமாகா வேட்பாளா் ரெங்கராஜன் 53796 வாக்குகள் பெற்று இரண்டாவது இடம் பிடித்தாா். இவருக்கு அடுத்தபடியாக சுயேட்சை வேட்பாளா் பாலகிருஷ்ணன் 23,771 வாக்குகள் பெற்று மூன்றாம் பிடித்தாா்.
8 வேட்பாளா் போட்டியிட்ட நிலையில் பிரதான கட்சியான திமுக , அதிமுகவுக்கு அடுத்த நிலையில் சுயேட்சை வேட்பாளா் பாலகிருஷ்ணன் மற்ற கட்சி வேட்பாளா்களை பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நாம் தமிழா் நான்காமிடம், அமமுக ஐந்தாமிடம், மக்கள் நீதி மய்யம் 6ஆவது இடத்தையும் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்