தஞ்சை மார்ச் 5 தஞ்சை வழியாக நாகூர் மயிலாடுதுறை முன்பதிவில்லா ரயில்கள் இயக்க வேண்டும் என பொதுமக்களும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ரயில்கள் இயக்கப்படவில்லை, கொரோனா தொற்று காரணமாக கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் பல்வேறு தலைவர்கள் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

மேலும் முழு அளவில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது, ஆனால் ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் பயணிகள் ரயில்கள் மற்றும் இயக்கப்படவில்லை, இதனால் பள்ளி கல்லூரி வேலைக்கு செல்பவர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள், இந்த நிலையில் தென்னக ரயில்வேயில் 20 முன்பதிவில்லா விரைவு ரயில்களை இயக்க உள்ளதாக ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.

அறிவிக்கப்பட்ட ரயில்கள் அனைத்தும் மார்ச் 15ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது அறிவிக்கப்பட்டுள்ள 20 ரயில்களில், திருச்சி மயிலாடுதுறை இடையே ஒரு ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்படவில்லை, அறிவிக்கப்பட்ட இடங்களில் திருச்சி மயிலாடுதுறை மற்றும் திருச்சி நாகை இடையே எந்த ஒரு ரயிலும் இயக்கப்படாது ரயில் உபயோகிப்பாளர்கள் மத்தியில் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எனவே தென்னக ரயில்வேவருகிற 15-ஆம் தேதி முதல் திருச்சியிலிருந்து தஞ்சை வழியாக நாகூர் மயிலாடுதுறைக்கு முன்பதிவில்லா ரயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்
தஞ்சை