தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் கிராமங்களுக்கு செல்லும் மினி பஸ்களில் ஏறி பயணிகள் முகக்கவசம் அணிந்துள்ளனரா என்று எம்எல்ஏ ஜவாஹிருல்லா ஆய்வு செய்தார்.
தஞ்சை மாவட்டம் பாபநாசம் பழைய பேருந்து நிலையம் அருகில் கிராமங்களுக்கு செல்லும் மினி பஸ்களில் ஏறி பயணிகள் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றுகின்றனரா என்பது குறித்து எம்எல்ஏ ஜவாஹிருல்லா ஆய்வு நடத்தினார். முகக்கவசம் அணியாத பயணிகளுக்கு முகக்கவசம் வழங்கினார்.
கொரோனா பாதுகாப்பு விதிகளை பின்பற்றுமாறு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவுரை வழங்கினார். ஆய்வின் போது பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன், திமுக தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் நாசர், பேரூர் செயலாளர் கபிலன், மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் தஞ்சை பாதுஷா, இளைஞரணி துணைச் செயலாளர் தஞ்சை மைதீன், லயன்ஸ் கிளப் தலைவர் சீனிவாசன், திமுக பிரமுகர் அனிபா ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தி நாகராஜன் நிருபர்.
http://thanjai.today/