புரவி புயலின் தாக்கத்தால் பெய்த கனமழையின் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் 30,000 ஏக்கரில் விளைந்த நெற்பயிர்கள் முழ்கி, தொடர்ந்து நெற்பயிர்கள் முழ்கியே உள்ளதால், நெற்பயிர்கள் அழுகியும், முளைத்தும் உள்ளது.

இந்த தொடர் மழையால் ஏக்கருக்கு 30 மூட்டைகள் விளைய வேண்டிய நிலத்தில் வெறும் 5 மூட்டைகள் மட்டுமே விளைச்சல் கண்டுள்ளது என்று வேதனையுடன் உழவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இப்போது நாத்து விட்டு நடவு செய்த நெற் பயிர்களும் நீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளது என்று ஆதங்கப்பட்டுள்ளனர், இவ்வாறு பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களையும் அதன் அளவையும் அரசு சரியாக கணக்கீட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று உழவர்கள் தமிழக அரசு மற்றும், தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவருக்கும் ‍கோரிக்கை வைத்துள்ளனர்.

‍செய்தி : இளமதி