தஞ்சாவூர் செப்.20- தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடி அறுவடை செய்யும் நிலையில் இருந்தன. மழையின் காரணமாக சூரக்கோட்டை, அம்மாபேட்டை, பொய்யுண்டார்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த 15 ஆயிர்த்திற்கு மேற்பட்ட ஏக்கர் நெல் மணிகள் நீரில் மூழ்கி சேதம் உழவர்கள் வேதனை. தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை.

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி 3.5 லட்சம் ஏக்கரில் செய்யப்பட்ட நிலையில் தஞ்சை மாவட்டத்தில் 1.66 லட்சம் ஏக்கர் மேற்கொள்ளப்பட்டது. டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அறுவடை பணிகள் பாதிப்பு தொடர்ந்து மழை பெய்தால் நெல்மணிகள் கடந்த ஆண்டை போல் சாய்ந்து பாதிக்கும் அபாயம் ஏற்படும்.

எனவே அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து விவசாயிகளிடமிருந்து ஈரப்பதம் பார்க்காமல் கொள்முதல் செய்தால் மட்டுமே விவசாயிகளை பாதுகாக்க முடியும் என கோரிக்கை. நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகள் நிலங்களுக்கே சென்று நெல்மணிகளில் கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மேலாக இரவு நேரங்களில் மழை பெய்து வருவதால் சூரக்கோட்டை பொய்யுண்டார்கோட்டை அம்மாபேட்டை காட்டூர் வாண்டையார் இருப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த15 ஆயிரம் ஏக்கர் நெல் மணிகள் சாய்ந்து அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டு குறுவை க்கு பயிர் காப்பீடு இல்லாத நிலையில் விவசாயிகள் அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அனைத்து நெல் மணிகள் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/