தஞ்சை ஏப்ரல் 16 தஞ்சை மாவட்டம் திருவையாறு நெல் கொள்முதல் நிலையத்தில் அதிகாரிகளின் அலட்சியத்தால் 12,000 டன் முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளது, திருவையாறு முதல் பூதலூர் தாலுகாவில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் 50 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து 1000 முதல் 2000 வரை நெல் மூட்டை நெல் கொள்முதல் செய்து மூட்டைகளில் கட்டி போட்டு அடுக்கி வைத்துள்ளனர்.

தமிழக அரசு கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை உடனடியாக லாரிகள் மூலம் இவற்றை நெல் அரவைக்கு சேமிப்புக் கிடங்கிற்கோ அனுப்பி வைக்க வேண்டும், ஆனால் அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் பணியாளர்கள் கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் அந்தந்த கொள்முதல் நிலையங்களில் வாரக்கணக்கில் 1000 முதல் 2000 வரை மூட்டை கட்டி போட்டு அடுக்கி வைத்துள்ளனர் கட்டி போட்டு அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் வீணாகிறது.

மேலும் நெல் மூட்டைகள் எடை குறைகிறது நெல் கொள்முதல் அலுவலர் அலட்சியத்தால் இந்த நெல் மூட்டைகள் இயக்கம் செய்யாமல் எடை குறைந்து அதற்கான தொகையை பணியாளர்களிடம் இருந்து கூடுதலாக நிர்வாகம் வசூல் செய்கிறது ஆனால் இந்த தொகையை நெல் கொள்முதல் அலுவலரிடம் இருந்து 20 சதவீதம் நிர்வாகம் வசூல் செய்ய வேண்டும் ஆனால் நிர்வாகம் அவர்களிடம் வசூல் செய்வது இல்லை இதனால் பணியாளர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.

கொள்முதல் செய்த நெல்லை லாரியில் ஏற்றுவதற்கு கண்காணிப்பாளர் மூலம் அந்தந்த கொள்முதல் நிலையத்திற்கு டோக்கன் போட்டு லாரிகளில் அனுப்பி வைக்க வேண்டும் ஆனால் ஒருசில கொள்முதல் நிலையங்களில் மட்டுமே லாரிகளை நீக்கி வைக்கிறார் இதற்கு காரணம் கண்காணிப்பாளரின் அலட்சியப் போக்கே நிர்வாகம் சரியான முறையில் ஒத்துழைப்பு செய்யாததால் பல வழிகளிலும் பணியாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

ஜெனிலியா தரக்கட்டுப்பாட்டு மேலாளர் அலட்சிய போக்கால் தான் எல்லா நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும் நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்கிறது நெல் மூட்டைகளை உடனே லாரி மூலம் இயக்கம் செய்து நிர்வாகத்திற்கு ஏற்படாமலும் பணியாளர்கள் பாதிக்கப்படாமலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை.