இந்த ஆண்டு முழுவதும் பரவலாக மழை பெய்தாலும் நான்காம் கால் பகுதியாகிய ஆக் முதல் டிசம்பர் மாதங்களில் கனத்த மழை பெய்து விளைநிலங்களில் விதைத்து வளர்ந்த முதிர்ந்த நெற்பயிர்கள் நீரில் முழ்கி கிடந்தன.
நீரில் முழ்கிய பயிர்களை உழவர்கள் அறுவடைச் செய்து வருகின்றனர், மழையின் காரணமாக நெல் மணிகள் ஈரப்பதத்துடன் இருப்பதால் முளைக்க தொடங்கியுள்ளன, அதனை உழவர்கள் நெற்களைக் கொட்டி உலர வைத்து வருகின்றனர். மேலும் மழையால் மீண்டும் நெற்கள் நனைந்து வீணாகமல் இருக்க கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து, கொள்முதல் செய்யக் கோரி வருகின்றனர்.
செய்தி : ம.செந்தில்குமார்