‍தொடர் மழையின் காரணமாக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பதை நிறுத்தியிருந்தனர், இப்போது கடைசி பத்து நாட்களுக்கு மேலாக மழை ஏதும் இல்லாததால் நெற் பயிர்கள் தண்ணீரின்றி காய்ந்து வரும் அவலம் தொடங்கியுள்ளது..

கல்லணையில் இருந்தும் கடந்த 1ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்படவில்லை, கடந்த ஒரு வாரமாக தஞ்சையில் மழையும் இல்லை, இதனால் தஞ்சை மாவட்டம் பூதலூர் பகுதிகளில் நடவு செய்யப்பட்டுள்ள சம்பா மற்றும் தாளடி பயிர்கள் தண்ணீரின்றி காய்ந்து வருகின்றன..

விவசாயிகள் கரூர் மாவட்டம் மாயனூர் தடுப்பணையில் இருந்து உடனடியாக தண்ணீரை திறந்துவிட்டு காய்ந்து வரும் நெற்பயிர்களை காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்..