தஞ்சாவூர் அக்.29 – காவிரி டெல்டா மாவட்டங்களில் காப்பீடு செய்த உழவர்களுக்கு தர வேண்டியது ஏதுமில்லை என மறுத்துள்ள 182 கிராமங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து விளக்கம் கேட்டு வேளாண்துறை முதன்மை செயலாளர் சமயமூர்த்தி உத்தரவு பி.ஆர்.பாண்டியன் தகவல்.

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர்
பி ஆர்.பாண்டியன் சென்னையில் வேளாண்மை துறை முதன்மைச் செயலாளர் சமயமூர்த்தி ஐஏஎஸ் அவர்களை நேரில் சந்தித்து காவிரி டெல்டாவில் காப்பீடு செய்த விவசாயிகள் இழப்பீடு வழங்குவதில் 182 கிராமங்களுக்கு ஜீரோ என கணக்கிட்டு இழப்பீடு வழங்க மறுத்து இருப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழக அர முதலமைச்சர் அவர்களுக்கு வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் சமயமூர்த்தி அவர்கள் மூலம் கோரிக்கை மனுவை அளித்து எடுத்துக்கூறினார். பாதிப்பு குறித்து எடுத்துரைத்தார்.

இதுகுறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் பாதிக்கப்பட்ட கிராமங்களில் பாதிப்பு குறித்து முழு விளக்கம் கேட்டு அதற்கான முழு ஆதாரங்களைப் பெற்று விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். உடனடியாக வேளாண் துறை இயக்குனர் மற்றும் காப்பீட்டு நிறுவன அலுவலர்களுக்கும் முழு ஆதாரங்களோடு விடுதல் கிராமங்களில் ஆய்வறிக்கை குறித்த அறிக்கையை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

பின்னர் இதுகுறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு குறித்து அவசர நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள உள்ளதாக உறுதியளித்தார். மேற்கண்டவாறு பி.ஆர்.பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

சென்னை மண்டல தலைவர் விகேவி. துரைசாமி செயலாளர் சைதை சிவா மயிலாடுதுறை மாவட்ட தலைவர் சீர்காழி வைத்தியநாதன், உயர்மட்டக்குழு உறுப்பினர் சுதா தர்மலிங்கம் உடனிருந்தனர்.

க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/