தஞ்சை ஏப்ரல்: 30, தஞ்சை மாவட்டம் புதுக்குடியிருப்பு தனியார் நிறுவனத்தின் சார்பில் மருத்துவ பயன்பாட்டிற்காக ஆக்சிசன் உற்பத்தி செய்யப்படுவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர் சுப்பையா அந்நிறுவனத்தின் சார்பில் ஆக்சிசன் தயார் செய்யும் முறை குறித்து கேட்டறிந்து அதனை நேரில் பார்வையிட்டு நாளொன்றுக்கு எவ்வளவு அளவு சிலிண்டர் ஆக்சிசன் தயார் செய்யப்படுகிறது என்பது குறித்து கேட்டறிந்தார்னய்.

தற்போது உற்பத்தி செய்யப்படும் மருத்துவ பயன்பாட்டிற்காக தயார் செய்யும் பணியில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு முன்னுரிமை வழங்கி அனுப்புவதற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என அந்நிறுவன அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.%

ஆய்வின்போது ஆட்சியர் கோவிந்தராவ், உதவி கலெக்டர் திருச்சி தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், ஆர்.டி.ஒ. வேலுமணி மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர் மருத்துவர் மருதுரை, மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் மருத்துவர் ஆடலரசி, சுகாதாரத்துறை துணை இயக்குனர் (பொறுப்பு) மருத்துவர் நமசிவாயம் உதவி இயக்குனர் மருத்துவர் ரவி, தாசில்தார் பாலசுப்ரமணியம் மற்றும் அலுவர்கள் இருந்தனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்,
தஞ்சை