தஞ்சாவூர் ஜூலை:20, தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு தாலுக்கா கீழவன்னிப்பட்டு பெரிய ஏரியில் கடந்த 15 நாட்களாக மாபெரும் தூர் வாரும் பணி நடைபெற்று வருகிறது.பொதுப்பணித்துறை அலுவலர்கள் மற்றும் மக்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு கடந்த ஜுலை 5ல் துவக்கப்பட்டு தொடர்ந்து தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த தூர்வாரும் பணிக்கு இந்த கிராமத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சு.ராமச்சந்திரன் பல லட்சம் மதிப்பிலான நிதியுதவியை செய்திருக்கிறார். இந்த தூர்வாரும் பணிக்கு ஊர்மக்கள் மிகுந்த ஒத்துழைப்பு தருவதோடு தேவையான உதவிகளையும் செய்கின்றனர்.

தூர்வாரும் எந்திரத்தின் மூலம் மண் எடுக்கப்பட்டு 7 டிராக்டர் டிப்பர் மூலமாக நான்கு பக்க கரைகளும் மண்கொட்டி உயர்த்தப்பட்டு வருகிறது. ஊராட்சி மன்றத் தலைவர் சு.தினகரன், துணைத் தலைவர் சி.மகாலிங்கம்,மற்றும்மா.இராமசாமி சி.ரவிக்குமார்.சி.கோவிந்தராசு சி.கருணாநிதி,சி.இளையரசன்,ம.பிரவின்,ப.ராமமூர்த்தி,செ.ரமேஷ்,ப.ராஜேஷ் கண்ணன், ப.தென்றல் செ.தர்மராஜ், சு.சாம்பமூர்த்தி, மா.அருண்நேரு, மே.பிரேம்குமார்.ரா.விஜய்,.சு.ராஜா,செ.சக்தி, மேலும் இளைஞர்கள் பலர் இணைந்து நின்று அயராது பணியாற்றுகின்றனர்.

தூர் வாரும் எந்திரத்தை கட்டணம் ஏதுமின்றி எக்ஸ்னோரா அமைப்பு கொடுத்துதவி உள்ளதற்கு கிராம மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர். தூர்வாரும் எந்திர ஓட்டுநர் ஆறுமுகத்தின் உழைப்பை அனைவரும் பாராட்டுகின்றனர்.

இந்த மாபெரும் மக்கள் பணியை செய்கின்ற அனைவருக்கும் இன்று கீழவன்னிப்பட்டு ஏரியில் நடந்த நிகழ்ச்சியில் திரு.சு இராமச்சந்திரன் ஏஐடியூசி தொழிற்சங்க மாநில செயலாளர் சி.சந்திரகுமார் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/