தஞ்சை சூலை 06, தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா கீழவன்னிப்பட்டு
பெரிய ஏரி தூர்வாரும் பணி துவக்க விழா ஊராட்சி மன்றத் தலைவர் சு.தினகரன் தலைமையில் நடைபெற்றது, நிகழ்ச்சியை கல்லணை கால்வாய் கோட்ட செயற் பொறியாளர் அர.அ.முருகேசன் துவக்கி வைத்தார்.

இன்டோகூல் காம்போசைட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குநர் சு.இராமச்சந்திரன் சுமார் ரூ10 லட்சம் மதிப்புள்ள தூர்வாரும் பணி துவக்கப்பட்டுள்ளதாகவும், இதனை தொடர்ந்து மரக்கன்றுகள் நடுதல் மற்றுமுள்ள குளங்களை தூர்வாரி நிலத்தடி நீரை பாதுகாக்கவும் இயற்கை வளங்களை உருவாக்கவும் பாதுகாக்கவும் உரிய நடவடிக்கைகளை இந்த கிராமத்தில் தொடர உள்ளதாக தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய பெருந்தலைவர் பார்வதி சிவசங்கரன்,வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ், உதவி பொறியாளர்கள் செல்லப்பாண்டியன்,சேகர், முன்னாள் அரசு வழக்கறிஞர் அ.குப்புசாமி ஏஐடியூசி தொழிற்சங்க மாநில செயலாளர் சி.சந்திரகுமார், சமவெளி உழவர் பாதுகாப்பு அமைப்பு சு பழநி ராஜன், செங்கழுநீர் ஏரி பராமரிப்பு க்குழு ஒருங்கிணைப்பாளர் கள்ளப்பெரம்பூர் பெ.ரவிச்சந்திரன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஒக்கநாடுகீழையூர் ந.சுரேஷ்குமார்.

கண்ணந்தங்குடி மேலையூர் செந்தில்குமார்,புலவன் காடு மாநெல்மெய்க்கப்பன் ஊராட்சிஒன்றிய உறுப்பினர்கள் ம.துரைராஜ், கலைச்செல்விபாரத், மற்றும் வன்னிப் பட்டு மா.இராமசாமி சி.ரவிகுமார் சி.கருணாநிதி இரா.பிரபாகரன் சு.இராமகிருஷ்ணன் தேவபுரம் ச.கஜேந்திரன் மேலவன்னிபட்டு வீரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிறைவாக ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் சி.மகாலிங்கம் நன்றி கூறினார்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/