தஞ்சாவூர் நவ.6 – தொடக்க விழா கீழவன்னிப்பட்டு பள்ளி வளாகத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் சு.தினகரன் தலைமையில் விழா நடைபெற்றது, ஏஐடியூசி மாநில செயலாளர் சி.சந்திரகுமார் விழாவை தொடங்கி வைத்து விளையாட்டில் இன்றைய இளைஞர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்ற வகையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த பகுதியை சேர்ந்த கிராம இளைஞர்கள் இதனை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டு சிறப்புரையாற்றினார். இண்டோகூல் காம்போசைட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சு.இராமச்சந்திரன் விளையாட்டு வீரர்களுக்கு சீருடை வழங்கி விளையாட்டு கழகத்தின் நோக்கங்களை விளக்கி பேசினார்.

நான்கு அணிகள் களத்தில் இறங்கி கபாடி விளையாட்டை சிறப்பாக ஆடினர். நடுவர்களாக கோ. உதயபிரகாஷ், கோ. விக்னேஷ், க. ரங்கநாத், இரா. விக்னேஷ் ஆகியோர் சிறப்பாக செயலாற்றினர். வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கும் அடுத்து வந்த அணி வீரர்களுக்கும் பரிசுகள்,நடுவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கினார்.


இளைஞர்களை பல்வேறு விளையாட்டுகளில் பங்கேற்க செய்து திறமைகளை வெளிக் கொண்டு :வருவதற்கும் திறைமையுள்ளவர்களின் திறமைகளை வளர்த்தெடுப்பதற்கும் இளைஞர்கள் மாணவர்களின் நல்ல செயல்பாடுகள் திசை திருப்பப்படாமல் சிறந்த வழியில் பயணிப்பதற்கும் இந்த விளையாட்டு கழகம் வழிவக்கும் என தனது உரையில் குறிப்பிட்டார்.

செமி பார்க் நிறுவன ஆலோசகர் டாக்டர் சி. கோவிந்தராசு, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சி. மகாலிங்கம், மா. இராமசாமி, டாக்டர் ச.சுதந்திரபாரதி, ஓய்வுபெற்ற ஆசிரியர் மு.கோவிந்தராஜ், லூபிகா ஜுவல்லரி ஆர்.பிரபாகரன், சரபோஜி கல்லூரி ஆசிரியர் த. நெடுமாறன் கு.சத்தியமூர்த்தி சி.கருணாநிதி, சா. இராமகிருஷ்ணன், சி. கோவிந்தராஜன், சி. இரவிக்குமார், தோ. திருமொழியான், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமத்தினர். திரளாக பங்கேற்றனர்.

க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/