ஒரத்தநாடு, ஜன.8
ஒரத்தநாட்டில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் முதலாமாண்டு கருத்தரங்கு விழா நடைபெற்றது.

விழாவிற்கு கூட்டமைப்பு தலைவர் வெங்டேஸ்வரன் தலைமை வகித்தார்.

செயலாளர் சுரேஷ் குமார் வரவேற்றார்.

ஊராட்சி மன்ற தலைவர்கள் சாமி ஜெகதீசன்,சங்கீதா செந்தில்,மகேஸ்வரி,மெய்கப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஒன்றியக்குழு தலைவர் பார்வதி சிவசங்கரன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் கந்தசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

இதில் பட்டிமன்ற நடுவர் நந்தலாலா, வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ், இன்ஸ்பெக்டர் சுப்ரமணி,நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குனர் மாரிமுத்து மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

க.சசிகுமார், நிருபர்,
தஞ்சாவூர்