தஞ்சை மார்ச் 29 தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எம். இராமச்சந்திரன் தொகுதிக்கு உட்பட்ட குருங்குளம் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள், தொழிலாளர்களிடம் மாட்டு வண்டியில் சென்று தீவிரவாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார், எதிர்த்து போட்டியிடும் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் மூன்று வேளாண் திருத்த சட்டத்திற்க்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்தது ஒரத்தநாடு விவசாயிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது, இதன் காரணமாகவே திமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் திமுக வேட்பாளர் எம்.இராமச்சந்திரன் உறுதி.

ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் M.இராமச்சந்திரன் இன்றைய தினம் குருங்குளம் சர்க்கரை ஆலை முன்பாக கரும்பு விவசாயிகள், ஆலை தொழிலாளர்களிடம் வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார், விவசாயத்தை அழித்து விடும் மூன்று வேளாண் திருத்த சட்டத்திற்க்கு ஆதரவு தெரிவித்து விட்டு இங்கு விவசாயிகளிடம் வாக்கு கேட்பது இப்பகுதி விவசாயிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


திமுக தேர்தல் அறிக்கையில் கரும்பிற்க்கு டன் ஒன்றுக்கு 4000 அளிக்கப்படும் என்பதற்க்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்பட்டுள்ளது… கரும்புக்கான நிலுவைத் தொகை வழங்கவும், கரும்பு அரவை 5 சதவிகதத்திற்க்கு பதிலாக 10% பிடித்தம் செய்யும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று விவசாயிகளிடம் உறுதியளித்தார். அதனை தொடர்ந்து திருக்கானூர்பட்டியில் மாட்டுவண்டியில் சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட இராமச்சந்திரனுக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்…

. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வேட்பாளர் எம்.இராமச்சந்திரன்…

ஒரத்தநாடு தொகுதி என்பது விவசாயிகள் நிறைந்த பகுதி.. இங்கு போட்டியிடும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் மாநிலங்களவை உறுப்பினராக இன்னும் ஒன்றரை ஆண்டுகள் பதவி மீதமுள்ள நிலையில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது ஏன் என்று கிராம மக்கள் கேட்கின்றனர்.. அதேநேரத்தில் விவசாயம் பாதிக்கக்கூடிய மூன்று வேளாண் சட்டத் திருத்தத்திற்கு வைத்திலிங்கம் ஆதரவளித்து வாக்களித்தது என்பது விவசாயிகளுக்கு மிகப்பெரிய கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாகவே குறைந்தபட்சம் 40 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறுவது உறுதி என்றார்…..

செய்தி க.சசிகுமார் நிருபர்,
தஞ்சை.