தஞ்சை மே 02 தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள தொகுதியான ஒரத்தநாடு தொகுதியில் மொத்தமாக 12 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் அதில் முதன்மையாக அதிமுக சார்பில் வைத்திலிங்கம் அவர்களும், திமுகவின் சார்பில் மூத்த அரசியல்வாதியான இராமசந்திரன் அவர்களும், அமமுகவின் சார்பில் மா.சேகர் அவர்களும் போட்டியிட்டனர்.

ஒரத்தநாடு தொகுதியில் ராமசந்திரன் தான் உறுதியாக வெற்றி பெறுவார் என்ற நிலையில் வைத்திலிங்கம் 29049 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார், வைத்திலிங்கம் அவர்கள் இப்போது ராஜ்யசபை உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது, இவர் சட்ட மன்ற உறுப்பினராக தொடர வேண்டுமானால் ராஜ்ய சபை உறுப்பினர் பதவியை துறந்தாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி தஞ்சை டுடே.