தஞ்சை மார்ச் 18 தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரான கழக துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைத்திலிங்கம் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் அங்கிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுடன் ஊர்வலமாக ஒரத்தநாடு வட்டாட்சியர் அலுவலகம் வரை திறந்த வேனில் பிரச்சாரம் செய்த படி சென்றார். பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலர் பழனிவேலிடம் , வைத்திலிங்கம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அருகில் கூட்டணிக் கட்சியான பாஜக மாவட்ட துணைத்தலைவர் துரைராஜ், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வட்டார தலைவர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அதேப்போல் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளரான மா.சேகர், ஒரத்தநாடு கடைவீதியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் அங்கிருந்து பைக்கில் ஊர்வலமாக வந்து, வட்டாச்சியார் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் பழனிவேல் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் கூட்டணி கட்சியான தே.மு.தி.க மாவட்ட துணை செயலாளர் பொன்.துரைராஜன், எஸ்.டி.பி.ஐ.கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட செயாலளர் எம்.முகமது ரஹிஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்,
தஞ்சை.