தஞ்சாவூர் ஆக:31 – தஞ்சை மாவட்டத்தில் நாளை முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையான பள்ளிகள் திறக்கப் படுகிறது இதற்கான தயார் நிலையில் 438 பள்ளிகள் உள்ளன.

இந்த பள்ளிகளில் உள்ள வகுப்பறைகள் சுத்தப்படுத்தப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கரோனா தொற்று பரவ தொடங்கியது எடுத்து பள்ளிகள் மூடப்பட்டன.

இந்த நிலையில் கடந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு மட்டும் இடையே பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டன அதன் பின்னர் இரண்டாவது அலை காரணமாக தொற்றுகள் வேகமாக பரவியதால் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன.

தற்போது தொற்று வெகுவாக குறைந்து வருவதால் நாளை (புதன்கிழமை) முதல் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது நாளைமுதல் பள்ளிகள் திறக்கப்படும் பள்ளிகள் சுத்தப்படுத்தி கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யவும் தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்படி தஞ்சை மாவட்டத்தில் அரசு பள்ளிகள் 227-ம் அரசு உதவி பெறும் பள்ளிகள் 62-ம் மெட்ரிக் பள்ளிகள் 97-ம் சுயநிதிப் பள்ளிகள் 24ம் சிபிஎஸ்இ 28-ம் பள்ளிகள் செயல்பட உள்ளன பள்ளிகளில் 9, முதல் 12ஆம் வகுப்பு அறைகள் செயல்பட உள்ளதையொட்டி பள்ளிகள் சுத்தப்படுத்தும் பணிகள் கடந்த சில நாட்களாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தஞ்சை மாவட்டத்தில் திறப்புக்கு தயாராக 438 பள்ளிகள் உள்ளன, இந்த பள்ளிகளில் உள்ள வகுப்பறைகள் சுத்தப்படுத்துவதோடு மாணவர்கள் அமரும் இடம், ஜன்னல்கள், உள்ளிட்ட இடங்களில் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது, மேலும் பள்ளிகளுக்கு வரும் மாணவ-மாணவிகளுக்கு கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்தவும், வெப்பமானி கொண்டு பரிசோதனை செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
http://thanjai.today/