தஞ்: நூல்கள் விற்பனையகத்துக்கு தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தனிக் கட்டடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து இதன் திறப்பு விழா நடந்தது.

தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிப்புத் துறை சாா்பில் வெளியிடப்படும் நூல்கள் விற்பனை அரண்மனை வளாகத்தில் செயல்பட்டு வந்தது. இப்பிரிவு கடந்த ஆண்டு முதன்மை வளாகத்தில் நிா்வாகக் கட்டடத்தின் முதல் தளத்தில் தற்காலிகமாக இயங்கி வந்தது.

இந்நிலையில், 12வது ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் பல்கலைக்கழக நல்கை ஆணைய நிதி ரூ. 6.57 லட்சம் மற்றும் ஒருங்கிணைந்த உயா் கல்வி வளா்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ. 5.18 லட்சம் மதிப்பில் நிா்வாகக் கட்டடம் அருகே வலதுபுறத்திலுள்ள பழைய கிட்டங்கி கட்டடத்தில் வளா்ச்சி மற்றும் சிறப்புச் சீா்காப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது.

தொடா்ந்து இக்கட்டடம் நூல் விற்பனையகமாகப் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த விற்பனையகத்தைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் பாலசுப்ரமணியன் திறந்துவைத்தாா்.

பதிவாளா் (பொ) கோவைமணி, ஆட்சிக்குழு உறுப்பினா் காமராசு, பதிப்புத் துறை இயக்குநா் (பொ) தியாகராஜன், நிதி அலுவலா் குணசேகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/