தஞ்சை சூன் 20 கொரொனா நோயின் பிடியில் இருந்து மக்களை காக்கும் பொருட்டு தஞ்சாவூர் மாவட்ட அனைத்து லயன்ஸ் சங்கங்கள் சார்பாக ரூபாய் 1 கோடி மதிப்பீட்டில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி, கும்பகோணம் அரசு மருத்துவமனை, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை, ஆகிய இடங்களில் ஆக்ஸிசன் உற்பத்தி நிலையம் அமைக்க லயன்ஸ் முன்னாள் மாவட்ட ஆளுநர் முகம்மது ரஃபி அவர்கள் தலைமையில் குழு ஏற்படுத்தப்பட்டு கடந்த 15 ம் தேதி தஞ்சாவூரிலும், இன்று 19.06.2021 பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையிலும் திறக்கப்பட்டது.

சிறப்பு விருந்தினராக தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அவர்கள் கலந்துகொண்டு திறந்து வைத்தார். பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
லயன்ஸ் மாவட்ட ஆளுனர் சேதுகுமார், பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் பாலச்சந்தர் சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் திலகம், பட்டுக்கோட்டை துணை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
லயன்ஸ் மாவட்ட முன்னாள் ஆளுநர்கள் ராஜகோபால், K. பிரேம் சேவை திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அமல். ஸ்டாலின் பீட்டர் பாபு, பட்டுக்கோட்டை மண்டல ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கபீர், திட்டத்தின் பொருளாளர் கிருஷ்ணகுமார், ரத்னகுமார், மணிவண்ணன், மண்டலத் தலைவர் கனகராஜ், வட்டாரத் தலைவர் காந்தி, இஞ்சினியர் செந்தில், மாவட்ட தலைவர்கள் அருணாச்சலம், டாக்டர் பாலகிருஷ்ணன் ஜவஹர் பாபு பேராசிரியர் காதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பட்டுக்கோட்டை, குயின்சிட்டி, சில்க்சிட்டி, மதுக்கூர், அதிராம்பட்டினம், பேராவூரணி, பேராவூரணி கோகனட் சிட்டி லயன்ஸ் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து லயன்ஸ் சங்கங்கள் சார்பில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி, கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதையடுத்து கோவையில் உள்ள பேரடே ஓஸன் என்ற தனியார் நிறுவனத்தின் மூலம் மூன்று இடங்களிலும், ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டது.
இதன் மூலம் அங்குள்ள இயற்கையான காற்றைக் கொண்டு நிமிடத்துக்கு 100 லிட்டர் ஆக்சிஜனை உற்பத்தி செய்து, 20 படுக்கையில் உள்ள நோயாளிகளுக்கு வழங்க முடியும்.
இந்த ஆக்சிஜன் உற்பத்தி மையத்தினை நேற்று தஞ்சை மாவட்ட ஆட்சியர், மக்கள் பயன்பாட்டுத்துக்கு துவக்கி வைத்தார்.

இதற்கு தலைவராக லயன்ஸ் முன்னாள் மாவட்ட ஆளுநர் லயன் S. முகமதுரஃபி, தலைமை ஏற்க,
இதுகுறித்து இந்த திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் லயன் அமல். ஸ்டாலின் பீட்டர் பாபு கூறியதாவது: அரசு மருத்துவமனைக்கு தான் அதிகளவு கரோனா நோயாளிகள் சிகிச்சை வருகை தந்ததால், அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உடனடியாக களத்தில் இறங்கியது.
அரசு மருத்துவமனைகளில் போதிய இடம் இருந்ததால், இங்கேயே ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை தொடங்க ஆலோசிக்கப்பட்டது. அப்போது நாங்கள் லயன்ஸ் சங்கங்கள் இணைந்து இத் திட்டத்தினை அருந்தி கொடுக்க முன்வந்தோம். மாவட்டத்தில் உள்ள 54 லயன்ஸ் சங்கங்களும் ஒன்றிணைந்து இந்த திட்டத்துக்கு ரூ.1 கோடி நிதி உதவியை வழங்கி உதவியுள்ளோம். தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு இந்த பராமரிப்பை லயன்ஸ் சங்கங்கள் மேற்கொள்ள உள்ளது. இதன்மூலம் கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கி அவர்களை குணப்படுத்த முடியும், கொரானா முடிந்தும் இந்த ஆக்ஸிஜன் பிளாண்ட் உபயோகப்படுத்தப்படும் என்றார்.
செய்தி நிருபர் தஞ்சை டுடே