தஞ்சாவூர் அக்: 2- உழவர்கள் நெல்லை அறுவடை செய்யும் முன்பாக அதனை ஆன்லைனில் பதிவு செய்த பின்னர் கிராம நிர்வாக அலுவலர் வேளாண்மைத் துறையினர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் அதிகாரிகள் ஒப்புதல் வழங்கிய பின்னர்தான் விளைந்த நெல்லை கொள்முதல் நிலையத்துக்கு விற்பனைக்கு கொண்டு வர வேண்டும் என்ற புதிய நடைமுறை நேற்று முதல் நடை முறைப் படுத்தப்பட்டுள்ளது.
இப் புதிய முறையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர் தஞ்சையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு உழவர்கள் தங்கள் கழுத்தில் நெல் முடிச்சுகளை தொங்கவிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர் பின்னர்.
அவர்கள் அலுவலக வளாகத்திற்குள் தரையில் படுத்தபடி பல்வேறு கோஷங்களை எழுப்பினர் இதை அறிந்த தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்தினர் ஆனால் முதுநிலை மண்டல மேலாளர் நேரில் வந்து தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தாமல் நாங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம் என உழவர்கள் தெரிவித்தனர்.
உழவர்கள் நீண்ட நேரம் போராட்டம் நடத்தியும் நுகர்பொருள் வாணிப கழக அலுவலர்கள் யாரும் மிதித்து வாரத்திற்கு வரவில்லை பின்னர் போலீசார் சென்று அதிகாரிகளை அழைத்து வந்தனர் அவர்கள் விவசாயிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர், அப்போது விவசாயிகள் குறுவை அறுவடை செய்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லைக் கொட்டி வைத்து காத்திருக்கிறோம்.
ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்கிறது இந்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை அதேநேரத்தில் நெல்லை விற்பனை செய்ய வேண்டுமென்றால் ஆன்லைனில் பதிவு செய்தால் மட்டுமே கொள்முதல் செய்யப்படும் என்ற புதிய நடைமுறையால் விவசாயிகளுக்கு எவ்வித பயனும் இல்லை ஆகவே இந்த நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்.
வெளி மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் இங்கு கொண்டு வந்து நெல்லை விற்பனை செய்வதாக கூறி இந்த புதிய நடைமுறையை கொண்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது ஊழல் முறைகேடுகளுக்கு கொள்முதல் நிலைய பணியாளர்களே துணை போவதால் அது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில் செயல்படும் இந்த திட்டத்தை உடனடியாக தமிழக அரசு கைவிட வேண்டும் தொடர்ந்து மழை பெய்ததால் 20 சதவீத ஈரப்பதம் வரை நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று உழவர்கள் கூறினர்.
அப்போது சில விவசாயிகள் எங்கள் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாவிட்டால் தீக்குளித்து தற்கொலை செய்யவும் தயங்க மாட்டோம் என ஆவேசமாக பேசினர் இதையடுத்து பழைய முறைப்படியே நெல் கொள்முதல் செய்யப்படும், என அதிகாரிகள் உறுதி அளித்ததால் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர் இதைத்தொடர்ந்து கடந்த 3 நாட்களுக்கு பிறகு மீண்டும் நெல்கொள்முதல் பணி பழைய முறைப்படியே தொடங்கப்பட்டுள்ளது.
செய்தி க.சசிகுமார் நிருபர்.
http://thanjai.today/