தஞ்சை சூன் 07: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உலக சுற்றுச் சூழல் தினத்தை ஒட்டி மரக்கன்று நடும் விழா மற்றும் இணையவழி விழிப்புணர்வு கருத்தரங்கு ஆகியவை நடைபெற்றது.

ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. முதல்வர் முனைவர் சிவகுமார் கல்லூரியின் கால்நடை பண்ணை வளாகம் அருகில் முதல் மரக்கன்றை நட்டார். பிறகு கால்நடை மருத்துவ மாணவர்களுக்கு இணைய வழி மூலமாக விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தப்பட்டது. முதல்வர் சிவகுமார், கறவை மாடுகளுக்குச் சுற்றுச் சூழலினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தீர்வுகள் என்ற தலைப்பில், வருங்கால சந்ததியினருக்கு மரம் வளர்ப்பு மூலம் உலகம் வெப்பமயமாதலை தடுக்கலாம் என்பதைக் குறித்து வலியுறுத்தினார்.

தொடர்ந்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர். கலைச்செல்வம் உரையாற்றுகையில் கடல்சார் உயிரியல் மூலம் மனிதனின் வாழ்விற்கு உதவும் கடல் உயிரிகளைப் பாதுகாத்தலின் அவசியத்தைக் குறித்து விளக்கினார். 190 மாணவர்கள் இந்த கருத்தரங்கு மூலம் பங்கேற்றுப் பயன்பெற்றனர். முனைவர் புவராஜன் மேற்கண்ட நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலுார்