தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 1 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதில் தஞ்சை மாவட்டத்தில் ஆயிரத்து 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

45 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது_ இப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு வீடு வீடாக சென்று உடல்  வெப்பநிலை உள்ளிட்டவை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து கொரோனா சிகிச்சை மையம், மருத்துவமனை, மருத்துவக்கல்லூரி ஆகியவற்றில் போதுமான அளவு படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. கொரோனா தடுப்பூசியைப் மாவட்ட நிர்வாகத்திற்கு தேவையான அளவு சுகாதாரத்துறை வழங்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தஞ்சை மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. தற்போது 12 ஆயிரம் டோஸ் தடுப்பூசி கையிருப்பில் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது இருப்பினும் பலர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தடுப்பூசி செலுத்தச் சென்றவர்கள் தடுப்பூசி கையிருப்பு இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் கூறுவதாக கூறுகின்றனர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்