தஞ்சை. டிச.17.கொரோனா இரண்டாவது அலையை அடுத்து உலக நாடுகளில்உருமாறிய ஓமைக்ரான் கொரோனா தொற்று அச்சுறுத்தி வருகிறது, இதனையெடுத்து தமிழ்நாடரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் கல்லூரி மாணவிகளின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் மற்றும் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி தஞ்சை நாஞ்சிக்கோட்டை கிராமத்திலுள்ள அரசமரத்தடியில் நடைபெற்றது.

இம்முகாமில்நாஞ்சிகோட்டைஊராட்சி மன்ற தலைவர் சத்யராஜ் கலந்து கொண்டு. பொதுமக்கள், மாணவ, மாணவிகள், முக கவசம் அணிவது மற்றும் கொரனோ பற்றிய விழிப்புணர்வு உள்ளிட்ட வழிகாட்டு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

மேற்கண்ட முகாமில்நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முத்தழகி வரவேற்புரை வழங்கினார்.பேராசிரியர் தீபா நன்றியுரை ஆற்றினார்.

க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/