தஞ்சாவூர் நவ 07 தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியத்தில் அமைந்துள்ள கிராமங்களில் ஒக்கநாடு கீழையூர் மற்றும் ஒக்கநாடு மேலையூர் கிராமங்கள் அடங்கும், இதில் ஒக்கநாடு மேலையூர் கிராமவாசிகள் இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்ல ஒடையை தாண்டியே எடுத்துச் செல்லும் சூழலில் உள்ளனர்.

அண்மையில் தமிழ்நாடு முழுவதும் விடாது மழை பெய்து வருகின்றது இதனால் குளம், ஏரிகள் நிறைந்தது கால்வாய் மற்றும் ஒடைகளில் நீர் நிறைந்து ஒடிக் கொண்டுள்ளது, சரியான பாதைகள்இல்லாவிட்டாலும் ஒடையில் நீர் ஒடாத காலங்களில் பெரிய சிரமம் இருப்பதில்லை.

மழைக்காலங்களில் வெள்ளம் வேகமாக அடித்துச் செல்லும் போது அதனை கடந்து செல்வதற்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவாதோடு, பலரால் இறுதி சடங்கில் கலந்து கொள்ளக் கூட முடியாத நிலை உருவாகி விடுகின்றது.

சுடுகாட்டிற்கு மட்டுமல்லாது பலநூறு ஏக்கர் நிலங்களும் ஒடையின் மறுகரையில் உள்ளதால் இந்த ஒடையை கடந்தே விவசாயத்திற்கும் செல்ல வேண்டி உள்ளதாகவும், பல சமயங்களில் சரியான நேரத்திற்கு (நாட்களுக்கு) சென்று பயிர்களை பார்க்க முடியாமல் போவதால், பயிர்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி விடுகின்றன என்றும் கிராம மக்கள் கண்ணீருடன் கூறுகின்றனர்.

நீடித்து வரும் இந்த அவலத்தை தற்போதைய அரசாவது கவனத்தில் கொண்டு சுடுகாட்டிற்குச் செல்ல சரியான பாதை அமைத்து தர வேண்டும் என்பதே அக்கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.

செய்தி அன்பரசன் ஜெயராமன்
https://thanjai.today/