தஞ்சாவூர் பிப்.4: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, மதுக்கூர் உழவர்களுக்கு எண்ணெய் வித்து உற்பத்தியை அதிகரிப்பதற்கான தொழில் நுட்ப பயிற்சி நடந்தது.

பட்டுக்கோட்டை வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் தேசிய உணவு பாதுகாப்பு எண் ணெய்வித்து திட்டத்தின் கீழ் 30 விவசாயிகளுக்கு எண்ணெய் வித்து உற்பத்தியை அதிகரிப்பதற்கான முன்னேறிய தொழில் நுட்பங்கள் குறித்த பயிற்சி விவசாயிகள் கலந்துரையாடலுடன் நடத்தப்பட்டது.

பயிற்சியில் ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி முதல் வர் வேலாயுதம் கலந்து கொண்டு நிலக்கடலை பயிரில் அதிக மகசூல் எடுப்பதற்கு முன்னோடி தொழில்நுட்பங்களான சரியான பருவத்தில் விதைத்தல், சரியான ரகத்தேர்வு, கடலைப் பயி ருக்கு ஜிப்சம் இட்டு மண் அணைத்தல், ட்ரம்களை கொத்துக்கடலை ரகத் டும் மகசூல் அதிகரிப்பு மற்றும் நிலக்கடலையில் வரும் பூச்சிகள் அதற்கான மேலாண்மை பற்றி தெளிவாக விளக்கிக் கூறினார்.

வேளாண் இணை இயக்குநர் ஜஸ்டின், எள் சாகுபடி மற்றும் அதற்கான முன்னோடி தொழில்நுட்பங்கள் பயிர் பயிர் எண்ணிக்கை பராம ரிப்பு எள் நுண்ணூட்டம் பயன்படுத்துவதன் அவசி யம்பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். தேசிய உணவு பாதுகாப்பு திட்ட தஞ்சை மாவட்ட ஆலோசகர் இளஞ்செழியன். எண்ணெய் வித்து பயிர்களுக்கான உர மேலாண்மை பற்றியும் திரவ உயிர் உரங்க தில் உருட்டுவதால் ஏற்பளின் அவசியம் பற்றியும் எடுத்துக் கூறினார்.

மதுக்கூர் வேளாண்மை உதவி இயக்குநர் திலகவதி, பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் மாலதி ஆகியோர் தஞ்சை நஞ்சையில் உளுந்து சாகுபடி பற்றி
பட்டுக்கோட்டை வேளாண் உதவி இயக்குநர் அலுவல் கத்தில் தேசிய உணவு பாதுகாப்பு எண்ணெய்வித்து திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது.

காணொளி வாயிலாக விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். விதை சான்று அலுவலர் சங்கீதா மற்றும் விதை ஆய்வு அலுவலர் நவீன்சேவியர் ஆகி யோர் விதைச்சான்று தொழில்நுட்பங்கள் மற் றும் விதைகளின் முக்கி யத்துவம் பற்றி எடுத்துக் கூறினர். பயிற்சியில் மதுக் கூர்வட்டார முன்னோடி விவசாயிகள் மூர்த்தி, சேதுராமன் ஆகியோர் தங்களுடைய அனுபவங் களை விவசாயிகளுடன் பகிர்ந்து கொண்டனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை வேளாண் அலுவலர்கள் சுதா மற்றும் சாந்தி ஆகியோர் செய்திருந்தனர்.

க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/