புரவிப் புயல் மற்றும் தொடர் மழைக்காரணமாக தஞ்சை, நாகை மற்றும் திருவாரூர் டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் தண்ணீரில் முழ்கி பெரும் நட்டத்தை உழவர்களுக்கு ஏற்படுத்தி உள்ளதை அறிவோம்.
இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் பார்வையிட வருகிற 28 29ம் தேதிகளில் மத்திய குழுவினர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரிடையாக பார்வையிடவும் ஆய்வறிக்கை தயார் செய்யவும் வருகின்றனர்.
இந்த குழுவில் மத்திய உள்துறை நிதி துறை சுகாதாரத்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் மத்திய அரசு உயர் அதிகாரிகள் இடம் பெற்று ஆய்வு செய்ய உள்ளதாக தஞ்சை மாவட்ட வேளாண்மை துறையினர் தெரிவித்தனர்.
தொடர்ந்து பெய்த மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து முளைத்து சேதமடைந்தது அதுமட்டுமல்லாமல் இளம் நடவு பெயர்களும் நீரில் மூழ்கி அழுகின விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுவதாகவும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் அரசிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர் என்பது நினைவுகூறத்தக்கது.