தஞ்சாவூர் செப் 3 மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் மீன்பிடித்து விட்டு கரை திரும்பிய விசைப்படகுகளில் ஏறி தடைசெய்யப்பட்ட வலைகளை விசைப்படகு மீனவர்கள் பயன்படுத்தி உள்ளனரா என அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

கடலுக்குள் உள்ள இயற்கை வளங்களை பாதுகாப்பது மற்றும் மீன்வளத்தை பெருக்கும் நோக்கத்தில் தஞ்சாவூர் மாவட்ட கடற் பகுதியில் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகள் சுருக்கு மடி வலைகள் உள்ளிட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட வலைகளை விசைப்படகு மீனவர்கள் பயன்படுத்துவதால் மீன்வளம் பாதிக்கப்படுவதோடு நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் அவ்வப்போது போராட்டங்கள் நடத்தப்பட்டது.

இந்நிலையில் தஞ்சாவூர் மீன்வளத்துறை உதவி இயக்குனர் சிவக்குமார் உத்தரவின் பேரில் நேற்று அதிகாலை முதல் கடலில் மீன்பிடித்து விட்டு மல்லிப்பட்டினம் துறைமுகம் திரும்பிய விசைப்படகுகளில் மீன் வள ஆய்வாளர் ஈஸ்வரி தலைமையில் மேற்படி சட்ட அமலாக்கப் பிரிவு காவல் சப்-இன்ஸ்பெக்டர் நவநீதன் கடலோர பாதுகாப்பு குடும்பத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் சேதுபாவாசத்திரம் காவலர் கபிலன் ஆகியோர் சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையில் தடைசெய்யப்பட்ட வலைகளை மீனவர்கள் ஏதும் பயன்படுத்தவில்லை என சோதனைக்கு பின்னர் பயன்படுத்தவில்லை.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/