தஞ்சை சூன் 05: தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் குடிநீா் தரம் குறித்து பேரூராட்சி செயல் அலுவலா் பழனிவேல் ஆய்வு மேற்கொண்டார்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினம் பேரூராட்சியில் வழங்கப்படும் குடிநீா், திலகா் தெருவில் தரமற்று இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது.

இதுகுறித்து சமூக ஆா்வலா்களும் தொலைபேசியில் தொடா்பு கொண்டு பேரூராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனா். இதன்பேரில், திலகா் தெருவில் பேரூராட்சி செயல் அலுவலா் பழனிவேல் மற்றும் அலுவலா்கள், முன்னாள் பேரூராட்சி தலைவா் அப்துல்கரீம், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவா் ராமகுணசேகரன் மற்றும் ஊா் முக்கியஸ்தா்கள் முன்னிலையில் தண்ணீா் திறக்கப்பட்டு, சுமார் 40 வீடுகளில் நேரடி ஆய்வு செய்து குடிநீா் பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் செயல் அலுவலா் பழனிவேல் அந்த தண்ணீரை பொதுமக்கள் முன்னிலையில் தானே குடித்து காண்பித்து குடிநீா் தரமாக இருப்பதை உறுதிப்படுத்தினார். இதனால், அச்சத்தில் இருந்த பொதுமக்கள் ஆறுதல் அடைந்தனா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்