தஞ்சை ஜன 7 தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் மூலம் கடந்த நவம்பர் மாதம் 28 29 மற்றும் டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட உதவியாளர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து தஞ்சாவூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மனோகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் இதர கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது இந்த தேர்வுக்கான முடிவுகள் கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் இணையதளத்தில் (WWW.tnjdrb.in), கடந்த 4ம் தேதி வெளியிடப்பட்டது.
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள தஞ்சாவூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் இதர கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு வருகிற 20 மற்றும் 21 ஆம் தேதி, தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகத்திலும், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு வருகிற 22-ஆம் தேதி கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகத்திலும் நடைபெற உள்ளது, நேர்முகத் தேர்வுக்கான அனுமதி சீட்டை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் இணையதளத்தில் (WWW.tnjdrb.in)பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
க.சசிகுமார், நிருபர்,
தஞ்சாவூர்