தஞ்சையில் பூக்காரத் தெரு ஒரு பழமையான குடியிருப்பு பகுதியாகும், அங்கு தான் பூச்சந்தையும் உள்ளது, பூக்காரத் தெரு மிகவும் நெருக்கமான பகுதி மட்டுமல்லாது அங்கு அதிகமான கடைகள் நிறைந்த பகுதியாகும்.

சாலையின் இருபக்கமும் அமைந்திருந்த கடைகள் சாலையை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்துச் சிமெண்ட் மேடைகள் , வெயில் கொட்டகைகள் அமைத்தும் சாலை போக்குவரத்திற்கு நெரிசலையும் இடையூறையும் விளைவித்ததால், மாநகராட்சி ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரியது.

பூக்காரத் தெரு வியாபாரிகள் அவற்றை அகற்றுவதற்கு காலக்கெடு கேட்டிருந்தனர், காலக்கெடு தாண்டியும் அகற்றாத சூழலில் நேற்று காவல்துறை குவிப்புடன் மாநகராட்சி ஆக்கிரமிப்புகளை அகற்றியது, பல வியாபாரிகள் தங்களாகவே மேடைகளையும் முன் வெயில் கொட்டைகளையும் நீக்கினர்.