தஞ்சாவூர்செப் 09: தஞ்சை மாவட்டம் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றியங்களில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதிப் பள்ளிகளில் கை கழுவும் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

கொரோனா காலகட்டத்தில், சுத்தம், சுகாதாரம், தூய்மை குறித்து பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் கடந்த 1ஆம் தேதி முதல் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக கை கழுவும் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

பேராவூரணி ஒன்றியத்தில் உள்ள 125 பள்ளிகளிலும் , சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் உள்ள 128 பள்ளிகளிலும் எவ்வாறு கைகளை கழுவி சுத்தம் செய்வது என்பது குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

பேராவூரணி ஒன்றியத்தில் வட்டார கல்வி அலுவலா் ரவிச்சந்திரன், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் (பொ) வேம்பையன், ஆசிரியா் பயிற்றுநா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இதேபோல் , சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் வட்டார கல்வி அலுவலா் ராமமூா்த்தி, வட்டார வள மைய மேற்பாா்வையாளா்( பொ) டேவிட்சாா்லஸ், ஆசிரியா் பயிற்றுநா்கள் கலந்து கொண்டனா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/