தஞ்சை பிப் 23 முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எழுத்துப்பூர்வமாக கொடுத்த வாக்குறுதியை அவரும் நிறைவேற்றவில்லை, அம்மாவின் ஆட்சி என்று கூறும் முதல்வர் பழனிசாமியும் நிறைவேற்றவில்லை என்பதை வலியுறுத்தி தஞ்சையில் 300 க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கருப்பு உடை அணிந்து சாலைமறியல் போராட்டம் அனைவரும் கைது.


சத்துணவு ஊழியர் சங்கத்தினர் 300 க்கும் மேற்பட்டோர், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததை கண்டித்து தஞ்சை ரயில் நிலையம் எதிரில் சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் ராமாமிருதம் தலைமையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்,அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில செயலாளர் பன்னீர்செல்வம் சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் ஆர்ப்பாட்ட கோரிக்கைகளை விளக்கி பேசினர்.


சத்துணவு திட்டத்தல் 38 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக வேலை செய்த ஊழியர்களை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முழு நேர அரசு ஊழியர்களாக பணிநிரந்தரம் செய்வோம் என்கிற வாக்குறுதி இன்று வரை நிறைவேற்றாததை கண்டித்தும்,
கால முறை ஊதியம், ஓய்வூதியம், வழங்க மறுத்துவருவதை கண்டித்தும் “கருப்பு உடை “அணிந்து பேரணியாக புறப்பட்டு காந்திஜி சாலையில் குறுக்கே அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர் போலீசார் அனைவரும் கைது செய்தனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை.