தஞ்சாவூர் செப்.30- தஞ்சாவூர் மாவட்டம்பாபநாசம் அருகேயுள்ளமேலகபிஸ்தலத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு,கோவிட்-19: தடுப்பூசி, 75-ஆவது சுதந்திர ஆண்டு கொண்டாட்டவிழா மற்றும் விழிப்புணர்வு வாகனத் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.


 மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தஞ்சாவூர் மக்கள் தொடர்பு கள அலுவலகமும்,தஞ்சாவூர் மாவட்டஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத் துறையும் இணைந்து நடத்திய இந்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியைபாபநாசம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுலர்(CDPO) லதா,ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட மாவட்ட உதவிஒருங்கிணைப்பாளர் துர்கா தேவி, மேலகபிஸ்தல மருத்துவ அலுவலர் டாக்டர். ராம் குமார், மேலகபிஸ்தல ஊராட்சி மன்றத் தலைவர் காமராஜ் ஆகியோர் சிறப்புவிருந்தினர்களாகக் கலந்து கொண்டு நிகழ்ச்சியை குத்து விளக்கேற்றியும், விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்தும், தொடங்கி வைத்துப் பேசினர்.

 
கொரோனா போன்ற உயிர்க்கொல்லி நோய், நம்மை தாக்காமல் இருக்க ஊட்டச்சத்து மிக்க உணவுகள், காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவற்றை அனைவரும் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதோடு மக்கள் வெளியே செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். வெளியே சென்று திரும்பியதும் மறக்காமல் கை, கால்களை சோப்பு போட்டு நன்றாகக் கழுவ வேண்டும். இதோடு அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசிப் போட்டுக்கொள்ள வேண்டும் என நிகழ்ச்சியில் பேசிய சிறப்பு விருந்தினர்கள் வலியுறுத்தினர்.


நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் மக்கள் தொடர்பு கள விளம்பர அலுவலர் கே. ஆனந்த பிரபு தலைமை தாங்கிப் பேசினார். மக்கள் தொடர்பு கள விளம்பர உதவியாளர் எஸ்.அருண் குமார் வரவேற்புரையாற்றினார்.இந்த நிகழ்ச்சியில் வைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்து மற்றும் அதன் பயன்கள் குறித்த கண்காட்சியை பொதுமக்கள்,கர்ப்பிணிகள், குழந்தைகள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். 


நிகழ்ச்சியில் “ஊட்டச்சத்துஏன் அவசியம்” என்ற தலைப்பில் கவிதை, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

செய்தி க.சசிகுமார் நிருபர்
https://thanjai.today/