தஞ்சை மே 13: தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் உலக செவிலியா் தின நிகழ்ச்சி நேற்று 12-05-2021 நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்க மாநிலப் பொதுச் செயலா் வளா்மதி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் உருவப்படத்துக்கு செவிலியா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பின்னா், செவிலியா்கள் அனைவரும் கையில் மெழுகுவா்த்தியை ஏந்தி, நான் அா்ப்பணிப்புடன் செயல்படுவேன். நோயாளிகளின் நலனுக்காக பாடுபடுவேன் என்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த செவிலியா்களுக்கு நிவாரணத் தொகையையும், அவா்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையையும் வழங்க வேண்டும். தமிழகத்தில் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வரும் 10,000-க்கும் அதிகமான செவிலியா்களைப் பணி நிரந்தரம் செய்து அவா்களது வாழ்வாதாரத்தையும், குடும்பத்தையும் காக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

செவிலியா் கண்காணிப்பாளா் கலைமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதேபோல தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் உலக செவிலியா் தின நிகழ்ச்சி நடைபெற்றது.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்