தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு கிராமத்தில் அமைந்துள்ள ஒக்கநாடு மே‍லையூரில் பாப்பான் ஒடை உள்ளது இந்த ஒடையை கடந்தே சுடுகாட்டிற்குச் ‍செல்ல வேண்டும், மழையில்லாத வெயில் காலங்களில் இந்த ஒடையில் நீர் ஒடுவதில்லை.

நீர் ஒடாத காலங்களில் மக்கள் இந்த ஒடையை கடந்து சென்று அடக்கம் செய்து விடுவார்கள், ஆனால் மழைக்காலங்களில் நெஞ்சுக்கு மேல் தண்ணீர் ஒடுவதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர், இந்த பாப்பான் ஒடைக்கிடையே சிறிய பாலம் அமைத்து தர அரசிடம் கோரிக்கை ‍வைத்து பல வருடங்கள் ஆகியும் அரசு கவனிக்காமல் அலட்சியமாக உள்ளது என மக்கள் மன வருத்ததுடன் கூறுகின்றனர்.

சில இடங்களில் அரசு இது போல தண்ணீரில் நடக்க வைக்கிறது, பல இடங்களில் ஒரு சமூகத்தார் மற்றோரு சமூகத்தாருக்கு வழி தராமல் தண்ணீரிலும், முள்ளிலும் நடக்க வைக்கின்றனர், இந்த இரண்டிற்கும் அரசு தான் காரணமாக உள்ளது.

செய்தி ம.செந்தில் குமார்.