புதுடில்லி: தலைமறைவு சாமியார் நித்தியானந்தா செய்யும் அட்ராசிட்டிகள் தாங்க முடியாத ரகமாக மாறி வருகிறது. தன்னை சிவனின் அவதாரம் என்று சொல்லி வந்தவர, தற்போது திருப்பதி ஏழுமலையான் தோற்றத்தில் நித்தியானந்தாவின் புகைப்படம் வெளியாகி பக்தர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

பல்வேறு பாலியல் புகாரில் சிக்கி தலைமறைவாக உள்ளவர் சாமியார் நித்யானந்தா. இவர் கைலாசம் என்ற நாட்டை உருவாக்கி உள்ளதாவும், இதற்கு தனி பணம் என்று அவ்வபோது அறிவிப்பை  மேலும் தனி ரிசர்வ் பேங்க் உள்ளதாக அதிரடி அறிவிப்பையும் நித்யானந்தா வெளியிட்டார்.

இதனால் கைலாசா தொடர்பாக பல்வேறு வதந்திகளும் உலா வந்த படியே தான் உள்ளது. இவர் ஏற்கனவே தன்னைத்தானே தான் கடவுள் என்றும் தான் சிவனின் அவதாரம் என்றும் கூறிக் கொண்டு வருகிறார். தற்போது பேஸ்புக்கில் திருப்பதி ஏழுமலையான் போல் காட்சியளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் பக்தர்களுக்கு ஆசிர்வாதம் வழங்குவதற்கு போன்றும் புகைப்படம் வெளியிட்டுள்ளார். என்னை வணங்கினால் நிதி நெருக்கடியில் இருந்து வெளியே வந்து ஏராளமான செல்வங்கள் பெறலாம் என்றும் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அரசியல்வாதிகள் காலத்திற்கு ஏற்ப கட்சி மாறுவது போல் இவர் கடவுள் அவதாரத்தை மாற்றுகின்றார் ‍என்று பொது மக்கள் பேசுகின்றனர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
தஞ்சை