தஞ்சாவூரில் ரகுமான் நகர் மருத்துவக் கல்விசாலை, ஆண்டாள் அழகர் திருமண மண்டபம் எதிரில் “பிரவுசர் புத்தக உலகம்” விற்பனையகத்தை மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன் திறந்து வைத்தார்..

மருத்துவக்கல்லூரி முதல்வர் (பொறுப்பு )மருததுரை முதல் புத்தக விற்பனையைதொடங்கி வைத்தார், நர்மதா அழகிரி முதல் எழுது பொருள்கள் விற்பனையையும் தொடங்கி வைத்தது புத்தகத்தை பெற்றுக்கொண்டார் உடன் தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் அமர்சிங் நீலகிரி ஊராட்சி மன்ற துணை தலைவர் பிரவுசர் புத்தக உலகத்தின் உரிமையாளர் மணிமொழி குணசேகரன் மற்றும் சான்றோர் பெருமக்கள் உள்ளனர்..

இப்புத்தக நிலையத்தில் அறிஞர்கள் விஞ்ஞானிகள் தமிழ்ச் சான்றோர் பெருமக்கள் அரசியல் தலைவர்கள் சமூகத் தலைவர்கள் இலக்கியவாதிகள் பொருளாதார நிபுணர்கள் தொழிலதிபர்கள் சட்டவல்லுனர்கள் மருத்துவ அறிஞர்கள் நீதிமான்கள் உலக அறிஞர்கள் எழுதிய புத்தகங்கள், மாணவர்களுக்கான புத்தகங்கள், எழுது பொருள்கள் மற்றும் அனைத்து வகுப்புகளுக்கான மாணவ மாணவிகளுக்கான, கல்லூரி மாணவர்களுக்கான மருத்துவ மாணவர்களுக்கான, புத்தகங்கள் எழுது பொருட்கள் புத்தக நிலையத்தில் அலங்கரிக்கின்றன..

க.சசிகுமார், நிருபர்,
தஞ்சாவூர்