தஞ்சை ஜனவரி 16 தஞ்சை பூக்கார வடக்கு லாயம், பூக்கார விளார் சாலையில் நாளை சனிக்கிழமை காலை 7:30 மணிக்கு உழவர் திருநாளின் மகிழ்வுடன் திறக்க உள்ளது.

இந்த புதிய தட்டச்சு பயிற்றகத்தை திரு. அ. தாவீது (கட்டிட மேற்பார்வையாளர், பொ.ப.து ஓய்வு) அவர்களால் குத்து விளக்கேற்றி திறந்து வைக்கப்படுகிறது, திறப்பு விழாவில் சிறப்புரையாக முனைவர் கோ.நாகேந்திரன் தலைமையாசிரியர் ( அரசினர் உயர்நிலைப்பள்ளி ஒரத்தநாடு புதூர்) ஆற்றுகின்றார்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திரு.ந.பாலு, ம.செந்தில்குமார்,திருமதி. செ.சுபாங்கிராணி செல்வம் மற்றும் நா.கீதா மகேஸ்வரி அவர்களும் கலந்து கொள்கின்றனர்.

இவ்விழாவினைபுலவர் சகாயராசு மற்றும் குடும்பத்தினர், ஏழுத்தேணி அறக்கட்டளை, யாழிசைப்பதிப்பகம், குக்கூ ஏற்றமதி நிறுவனம் தமிழ்நாடு மற்றும் குக்கூ வர்த்தகம் சிங்கை ஆகியோர் ஒருங்கமைக்க, தொடர்பாளராக திரு ந.நாராயணன் ( கைப்பேசி +91 94444 36336)பங்காற்ற உள்ளார்.

கணிணியில் தட்டச்சு செய்வதற்கும் தட்டச்சு பயிற்சி மிக முதன்மையென்றும், அதனை புதிய தட்டச்சு பயிற்றகம் சிறப்பாக பயிற்றுவிக்கும் என்றும் திரு ந.நாராயணன் அவர்கள் எமது நிருபரிடம் தெரிவித்தார் தட்டச்சகம் சிறந்த பணியாற்ற தஞ்சை டுடே நிறுவனம் தங்களது வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கின்றது.

அமுதவள்ளி நிருபர்
தஞ்சை