தஞ்சை ஜன:2 தமிழ் நாட்டில் பறிபோகும் மாணவர்களின் கல்வி உரிமை. இளைஞர்களின் வேலை வாய்ப்பு உரிமைகளை மீட்டெடுப்போம்  முத்துக்குமார் 12ம் ஆண்டு நினைவுநாளில் உறுதியேற்பு  கடந்த 2009 ம் ஆண்டு இலங்கையில் நடந்த தமிழீழத்திற்கான போரில் 1000 கணக்கான தமிழீழ தமிழர்கள் இன படுகொலை செய்யப்பட்டபோது அதனை தடுத்து நிறுத்தவும், பாதுகாக்கவும், சர்வதேச நாடுகளால் தடை செய்யப்பட்ட  இரசாயன குண்டுகளையும், கொத்து குண்டுகளையும் பயன்படுத்தி  பாசிச ராஜபக்சேவின் சிங்கள இராணுவம் தமிழர்களின் வாழ்விடங்கள் ,மத வழிபாட்டு தளங்கள்.  மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள் தகர்க்கப்படு மக்கள் அனதையாக துரத்தப்பட்ட கொடூர நிகழ்வை உலகிற்கு தெரிய படுத்தவும் , நீதி கேட்டும் தன்னைத்தானே தீக்கிரையாக்கி தியாகியான பத்திரிகையாளர்  பத்திரிக்கையாளர் முத்துக்குமார் அவர்களின் 12ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி தஞ்சை இரயில் நிலையம் முன்பாக  இன்று காலை 10 மணிக்கு சமூக ஆர்வலர் அயனாவரம் சி.முருகேசன் தலைமையில் நடைபெற்றது.

ஒருங்கிணைப்பாளர் துரை. மதிவாணன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் முத்து.உத்திராபதி , மாவட்ட பொருளாளர் என்பாலசுப்ரமணியன்  ,மக்களதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன், நகர செயலாளர் தேவா, AITUC மாவட்ட செயலாளர் ஆர் . தில்லைவனம், தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி   மா,லெ  மாவட்ட செயலாளர்  அருண்சோரி, சமவெளி விவசாய இயக்க ஒருங்கிணைப்பாளர் சு.பழனிராஜன், சிபிஎம்எல் மக்கள் விடுதலை மாவட்ட செயலாளர். இரா.அருணாசலம். மனிதநேய ஜனநாயக கட்சி மாநகர செயலாளர். அப்துல்லா  ,சமூக ஆர்வலர்கள் பொறியாளர் கென்னடி, இரா.பிரசன்னா, முனைவர் துரை. குமார் சிஐடியு சங்க நிர்வாகி மணிமாறன் , விசிறி சாமியார் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக முத்துக்குமார் உருவப்படத்திற்கு  மலர்மாலை அணிவித்து  மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. முடிவில் தமிழ்நாட்டில் மாணவர்களின் உயர்கல்வி உள்ளிட்ட கல்வி உரிமைகள், இளைஞர்களின் வேலை வாய்ப்பு உரிமைகள் , விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகள் , நதிநீர் உரிமைகள் கருத்துரிமை, எழுத்துரிமை உள்ளிட்ட  பறிக்கப்படும் உரிமைகள், கொள்ளையடிக்கப்படும் தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை மீட்டெடுக்கவும் , காவி பாசிச கார்ப்பரேட் இந்துத்துவா ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சாதி, மதம் கடந்து தமிழராய் ஒன்றிணைவோம் போராடுவோம் என உறுதியேற்கப்பட்டது.

செய்தி : சசிகுமார், நிருபர்,
தஞ்சை.