தஞ்சாவூர், பிப்.4- தஞ்சாவூர் தலைமை தபால் நிலையத்தில் கீழே கிடந்த பணத்தை எடுத்து உரியவரிடம் ஒப்படைத்து உதவியவருக்கு சால்வை அணிவித்து பாராட்டினர்
தஞ்சாவூர் கீழவாசல் ஆட்டுமந்தை வைக்கோல்கார தெருவை சேர்ந்தவர் முபாரக் (42). இவர் தஞ்சாவூர் தலைமை அஞ்சலகத்துக்கு பண பரிவர்த்தனைக்காக வந்திருந்தார். அப்போது அஞ்சலக கவுண்டர் ஹாலில் கீழே ரூ.1,000 கிடந்ததை எடுத்து இதுகுறித்து, அஞ்சலகத்தில் இருந்தவர்களிடம் பணம் குறித்து விசாரித்தார். பின்னர் அந்த பணத்தை தஞ்சாவூர் தலைமை அஞ்சலக முதுநிலை அஞ்சலக தலைவர் அருள்தாசிடம் ஒப்படைத்து நடந்த விவரங்களை கூறி உரியவரிடம் ஒப்படைக்குமாறு
கூறினார்.

முபாரக்கின் நேர்மையான செயலை பாராட்டி அருள்தாஸ். மற்றும் அஞ்சலக ஊழியர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் முதுநிலை அஞ்சலக தலைவர் அருள்தாஸ் விசாரித்த போது தபால் நிலையத்திற்கு டெபாசிட் செய்ய வந்த ஏழை பெண்ணின் பணம் என்பது தெரிய வந்ததும். இதையடுத்து சம்பந்தபட்ட பெண்ணை தலைமை அஞ்சலகத் துக்கு வரவழைத்து பணம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து பணத்தை நேர்மையான முறையில் எடுத்து கொடுத்து உரியவரிடம் ஒப்படைக்க உதவிய முபாரக்கை முதுநிலை அஞ்சலக தலைவர் அருள்தாஸ் சால்வை அணிவித்து பாராட்டி னார்.

க.சசிகுமார் நிருபர்.
http://thanjai.today