தஞ்சை தெற்கு வீதி அருகே உள்ள ஸ்டார் தனியார் நிதி நிறுவனத்தில் தொகுப்பு வீடு கட்டுவதற்காக இரண்டு வருடத்திற்கு முன்பு ஒக்கநாடு மேலையூரை சேர்ந்த கணேசன் அவர்கள் 6 லட்சம் கடன் வாங்கியுள்ளார். வாங்கிய கடனில் 4 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் செலுத்தி விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு கணேசன் இறந்துவிட்டார். இதனையடுத்து அவரது மகனான பாஸ்கர் மற்றும் கணேசன் மனைவி செல்லம்மாள் இருவரையும் மீதி உள்ள தொகையை வட்டியுடன் சேர்த்து 12 லட்சம் கடன் கட்ட வேண்டும் என்று ஸ்டார் நிதி நிறுவனம் நெருக்கடி கொடுக்கப்பட்டதாக கூறி மகன் மற்றும் அவரது தாயாருக்கு மிரட்டலும் விடுக்கப்பட்டதாக புகார் தெரிவித்தனர்.
இதன் அடிப்படையில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தவர்கள் திடீரென பெட்ரோல் கேனை கையிலெடுத்து மேலே இருவரும் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்த காவலர்கள் உடனடியாக அவர்கள் கையில் இருந்து பெட்ரோல் கேனை பிடுங்கி தஞ்சை தமிழ் பல்கலைக்கழக காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர் இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
ம.சசிக்குமார், நிருபர்,
தஞ்சை