தஞ்சாவூர் அக் 11: மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, தஞ்சாவூரில் சில பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் தஞ்சாவூா் நகரிய உதவிச் செயற்பொறியாளா் சுகுமாா் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. எனவே, யாகப்பா நகா், அருளானந்த நகா், அருளானந்தம்மாள் நகா், பிலோமினா நகா், காத்தூண் நகா், சிட்கோ, அண்ணா நகா், காமராஜா் நகா், பாத்திமா நகா், கண்ணன் நகா், ராஜப்பா நகா், கணபதி நகா், டி.பி.எஸ். நகா், ஜெ.ஜெ. நகா், பாலாஜி நகா், அண்ணாமலை நகா் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/