தஞ்சை மாநகர் திமுக பொருளாளர், மற்றும் தஞ்சை மத்திய மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைமைப்பாளர் M.J.சாதிக்பாட்ஷா & M.J.ஜஹாங்கீர் அவர்கள் தந்தையும் தஞ்சை நகர தி.மு.கழக முத்த முன்னோடியும், முன்னாள் நகர்மன்ற உறுப்பினரும், 20 வது வட்ட கழக செயலாளரும், அன்பு ஸ்வீட்ஸ், அன்பு பால் நிலையம், செம்மீன் ஹோட்டல் உரிமையாளருமான திரு M.மூகம்மது ஐக்கிரியா Ex., MC அவர்கள் (27.02.2021) மாலை 04.00 மணியளவில் இயற்கை எய்தினார்.

அன்னாரது மறைவிற்கு திமுக கழக தலைமை ஆழ்ந்த இரங்கலை ‍தெரிவித்துள்ளது, M.மூகம்மது ஐக்கிரியா ஒரு மூத்த திமுக கட்சிக்காரர் என்பதால் நூற்றுகணக்கான திமுக தொண்டர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

அன்னாரது இறுதி ஊர்வலம் (28.02.2021) அன்று மாலை 04.00 மணியளவில் சீனிவாசபுரம், வெங்கடேஸ்வரா பள்ளி அருகில், அலமேலுமங்காபுரம் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து புறப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

செய்தி ம.செந்தில்குமார்
தஞ்சை