தஞ்சை மே 31: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நாட்டுச்சாலையில் நடமாடும் காய்கறி வாகனத்தை எம்எல்ஏ அண்ணாதுரை துவக்கி வைத்தார். ஊரடங்கு காலத்தில் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இது தொடங்கப்பட்டுள்ளது.

உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மூலமாக வீடுதேடி வரும் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் முதல்வர் வழிகாட்டுதலின்படி வேளாண்மை விற்பனை மற்றும் வணிக வரித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் உழவர் சந்தை மூலமாக அனைத்து வட்டாரங்களிலும் கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் பழங்கள் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் மூலமாக மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு வெளியே செல்வதை தடுக்க முடியும் இதனை கருத்தில் கொண்டு பட்டுக்கோட்டை வட்டம் நாட்டுச்சாலை கிராமத்தில் நடமாடும் வாகனத்தில் காய்கறி விற்பனை முறையை எம்எல்ஏ அண்ணாதுரை துவக்கி வைத்தார். வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை வேளாண்மை அலுவலர் தாரா மற்றும் உதவி வேளாண்மை. அலுவலர்கள் வெங்கடாசலம், கார்த்திக் மற்றும் சசிகுமார், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி செல்லத்துரை, ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயராதா அருணகிரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.