தஞ்சை மே 10 கும்பகோணம் அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு தரமான சிகிச்சையை அளிக்க வேண்டும் என்று மருத்துவர்களிடம் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் அறிவுறுத்தினார்.

கும்பகோணம் தலைமை அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவர்களிடம் எவ்வளவு நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவப் பணியிடங்கள் போதுமானதா உள்ளதா? மருந்துகள் கையிருப்பு உள்ளதா என கேட்டறிந்தார். பொதுமக்களுக்கு தரமான சிகிச்சையை உடனுக்குடன் வழங்க வேண்டும் என்றார்.

பின்னர் புதிதாக வாங்கப்பட்டுள்ள படுக்கைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மயிலாடுதுறை தொகுதி எம்பி ராமலிங்கம், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், நகர செயலாளர் தமிழழகன், ஒன்றிய செயலாளர்கள் கணேசன், அசோக்குமார், பாஸ்கர், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் முத்துசெல்வன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்.