தஞ்சை மே 10: தமிழக அரசின் கொறடாவாக நியமிக்கப்பட்ட திருவிடைமருதூர் தொகுதி எம்எல்ஏ முனைவர் கோவி.செழியனுக்கு அணைக்கரையில் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தனிதொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக திமுக சார்பில் போட்டியிட்ட முனைவர் கோவி செழியன் மூன்றாவது முறையாக வெற்றிப்பெற்றார். தொடர்ந்து அவர் தலைமை அரசு கொறாடாவாக நியமிக்கப்பட்டார்.
பொறுப்பு ஏற்ற பின்னர் ஊருக்கு திரும்பிய அவருக்கு தஞ்சை மாவட்ட எல்லையான அணைக்கரையில் நாற்பது நாதஸ்வரம் கலைஞர்கள் மேள தாளம் முழங்க பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் மாலை அணிவித்தும் திருவிடைமருதூர் திமுக நிர்வாகிகள் வரவேற்றனர்.
பின்பு அவர் பேசுகையி்ல், ‘எளிமைக்கும், தூய்மைக்கும், நேர்மைக்கும் கிடைத்த வெற்றி. என்னை தலைமை அரசு கொறாடாவாக நியமித்த தலைவர் தளபதி அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். என்னை திருவிடைமருதூர் தொகுதில் வெற்றிபெறசெய்து. இது திமுக கோட்டை என்று நிரூபித்துள்ளார்கள். எனக்கு வாக்களித்த தொகுதி மக்களுக்கு நன்றி என கூறினார்.
மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ. ராமலிங்கம் தலைமை வகித்தார். திருப்பனந்தாள் ஒன்றிய செயலாளர் கோ.க. அண்ணாதுரை மற்றும் கட்சி தொண்டர்கள் நிகழ்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள்.
செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்