தஞ்சாவூர் அக்.5- தஞ்சை மாவட்டத்தில் சிறுபான்மையினர் மாணவ மாணவியருக்கு ஒன்றிய அரசு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழ்நாட்டில் ஒன்றிய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறிஸ்துவர், சீக்கியர், புத்த மதத்தினர் பார்சி மற்றும் ஜைன மதத்தை சேர்ந்த அரசு அரசு உதவி பெறும் மற்றும் ஒன்றிய மற்றும் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2021 22 ஆம் கல்வியாண்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையும் 11-ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐ.டி, ஐ.ஐ.டி, சி,) வாழ்க்கை தொழிற்கல்வி பாலிடெக்னிக் செவிலியர் ஆசிரியர் பட்டப்படிப்பு இளங்கலை முதுகலை பட்டப்படிப்புகள்) பயில்பவர்களுக்கு மேற்படிப்பு கல்வி உதவித்தொகை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி பயிர் பெறுவதற்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற மத்திய அரசின் www.scholarships.gov.in என்றதேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகைத் திட்டத்திற்கு அடுத்த மாதம் நவம்பர் 15ஆம் தேதி, வரையிலும் மேற்படிப்பு மற்றும் தகுதி வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை அடுத்தமாதம் முப்பதாம் தேதி வரையிலும் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஒன்றிய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள கல்வி நிலையங்கள் தங்களின் கல்வி நிலையத்திற்கான ஒருங்கிணைப்பு அலுவலரின் ஆதார் விவரங்களை இணைத்த பின்னரே விண்ணப்பங்களை இணையதளத்தில் சரி பார்க்க இயலும் புதியதாக விண்ணப்பிக்கும் மாணவ மாணவிகள் இணையதளத்தில் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் அனைத்து கல்வி நிலையங்களும் தங்களுடைய குறியீட்டு எண்ணை மாணவ மாணவிகளுக்கு தெரிவிக்க வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/