தஞ்சை சூன் 23,தஞ்சையில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு மற்றும், “தஞ்சை இயற்கை அறக்கட்டளை சார்பில், தஞ்சாவூர் ஆற்றுப்பாலம் பெட்ரோல் பங்க் வளாகத்தில், 30 நாட்கள் தொடர் சேவையாக இலவச கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இயற்கை அறக்கட்டளை தலைவர் முகமது இக்பால் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு தஞ்சை மாநகரத் தலைவர் அப்துல் நஷீர் ஆகியோர் தலைமை வகித்தனர். இயற்கை அறக்கட்டளை செயலாளர்கள் கருணாகரன், ஜெயக்குமார், பொருளாளர் அப்பாஸ், இணைச் செயலாளர் சீனிவாசன், இயக்குனர் சாகுல் ஹமீது, ஒருங்கிணைப்பாளர் வடிவேலன், சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், வணிகர் சங்க மாவட்ட செயலாளர் ரவி, ஐக்கிய ஜமாத் மாவட்ட தலைவர் ஜாகிர் உசேன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெயினுலாபுதீன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரச் செயலாளர் என். குருசாமி, இந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.கலைச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த இலவச கபசுர குடிநீர் வழங்க பங்கு வளாகத்தில் இடமளித்த பங்க் நிர்வாகத்தினருக்கும், நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் இயற்கை அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் வடிவேலன் நன்றி தெரிவித்தார்.

தினமும் 200 பேர் வீதம் மொத்தமாக 6,000 பொதுமக்கள் இந்த இலவச சேவை மூலம் பயனடைந்துள்ளனர். இக்கட்டான சூழ்நிலையிலும் இதுபோல தன்னலமற்ற சேவையாற்றிய இயற்கை அறக்கட்டளை மற்றும் சிறுபான்மை மக்கள் நலக்குழு நிர்வாகிகளை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை.