தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் திருவாரூர் மாவட்டம் குறுவை சாகுபடி முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் குறித்து மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் திரு. எம். ஆர் கே. பன்னீர்செல்வம் அவர்கள், மாண்புமிகு அரசு தலைமை கொறடா முனிவர். கோவி செழியன் அவர்கள், வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலர் திரு.சி. சமயமூர்த்தி இ.ஆ.ம் வேளாண்மை துறை இயக்குனர் திரு.வ. தட்சிணாமூர்த்தி இ.ஆப, மாவட்ட ஆட்சித் தலைவர் கோவிந்த ராவ் இ.ஆப, ஆகியோர் முன்னிலையில் இன்று (07.06.2021} நடைபெற்றது.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எதிர்வரும் ஜூன் மாதம் 12 ஆம் தேதி அன்று மேட்டூர் அணை திறக்கப்படும் என அறிவித்ததை தொடர்ந்து, டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி தொடர்பாக துறை மேற்கொண்டு வரும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் திரு எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் தஞ்சாவூரில் இன்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கும் டெல்டா திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும் கடலூர் அரியலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் காவேரி நதி நீர் பாயும் சில பகுதிகளிலும் இயல்பாக 3.234 ஏட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்படும்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி காவேரி டெல்டா மாவட்டங்களில் சிறப்பு கால்வாய் தூர்வாரும் பணிகள் மற்றும் மேட்டூர் அணை திறப்பு குறித்து நீர்வளத்துறை அமைச்சர், வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர், நகர்புற நிர்வாகத்துறை அமைச்சர், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் தலைமை கொறடா ஆகியோர் 16.05-2021 அன்று தஞ்சாவூரில் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தி டெல்டா மாவட்டங்களில் உள்ள பல்வேறு விவசாயிகள் சங்க பிரதிநிதிகளை கலந்தாலோசித்து டெல்டா மாவட்டங்களில் கோடி மதிப்பீட்டில் 647 தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த 03.06.2021 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலனுக்காக. எதிர்வரும் ஜூன் மாதம் 12ஆம் தேதி முதல் மேட்டூர் அணை திறந்து விடப்படும் என அறிவித்தார்கள். நடப்பு குறுவை பருவத்தில் 3.50 லட்சம் ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, குறுவை சாகுபடிக்கு தேவையான குறுகிய கால நெல் ரக விதைகள், ரசாயன உரங்கள். உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்ட உரங்கள் போன்ற இடுபொருட்களை போதிய அளவு இருப்பில் வைத்திடவும், நெல் நடவு இயந்திரங்களைக் கொண்டு. விரைவாக நடவு பணியை மேற்கொள்வதற்கும் வேளாண்மைத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

ஒட்டுமொத்த டெல்டா பகுதிகளில் குறுவை நெல் சாகுபடிக்கு 5600 மெட்ரிக் டன் நெல் விதைகள் தேவைப்படுகிறது. இதுவரை வேளாண்மை விரிவாகக் மையங்கள் மற்றும் தனியார் விற்பனை நிலையங்கள் மூலம்.3155 மெட்ரிக் டன் நெல் விதைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. மேலும் 899 மெட்ரிக் டன் விதைகள் வேளாண்மை விரிவாக்க மையங்களிலும், 2012 மெட்ரிக் டன் விதைகள் தனியார் விற்பனை நிலையங்களிலும் ஆகV மொத்தம் 2911 மெட்ரிக் டன் விதைகள் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

அதேபோன்று குறுவை நெல் சாகுபடிக்கு தேவையான 1,38,251 மெட்ரிக் டன் ரசாயன உரங்களில் இதுவரை 42,310 மெட்ரிக் டன் ரசாயன உரங்கள் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. மேலும் விவசாயிகளின் தேவைக்காக 95.110 மெட்ரிக் டன் ரசாயன உரங்கள் அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் ரசாயன உரங்கள் மாவட்ட வாரியான மாதந்திர தேவை ஒதுக்கீட்டின் படி தொடர்ந்து உர நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. 835 நெல் நடவு இயந்திரங்கள் மூலம் டெல்டா மாவட்டங்களில் நெல் நடவுப் பணி விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடைமடைப் பகுதிகளுக்கும் பாசன நீர் விரைவில் சென்றடையவும் நகையில் வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.

அரசு மேற்கொண்டு வரும் இத்தகைய முன்னேற்பாடு நடவடிக்கைகளின் காரணமாக 7.62021 இன்றுவரை, 1.42,766 ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக 1,10,000 ஏக்கரில் நெல் நடவு மேற்கொள்வதற்கு வசதியாக, 2,477 ஏக்கரில் நெல் நாற்றங்கால் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நெல் நாற்றங்கால் விடும் பணி நடைபெற்று வருகிறது. பாசன நீரினை சிக்கனமாக பயன்படுத்தும் நோக்கத்தில், கடைமடை பகுதிகளில் நேரடி நெல் விதைப்பு பணி மேற்கொள்வதற்கு விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. எனவே நடப்பாண்டில் குறுவை நெல் சாகுபடி இலக்கான 3,50,000 ஏக்கரை விட கூடுதலான பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இன்றைய ஆய்வுக் கூட்டத்தில் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு தேவையான அனைந்து இடுபொருட்களையும் காலத்தில் வினியோகம் செய்திடவும். வேளாண் விரிவாக்க சேவைகளை வழங்குமாறும்.சிறப்பு தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்குமாறும் வேளாண்மை, வேளாண் பொறியியல் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்களை மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் அறிவுரை வழங்கினார்கள்.

தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள காளிமேடு கிராமத்தில் செம்மை நெல் சாகுபடி முறையில் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால், உழவர் குழுக்களுக்கு வழங்கப்பட்ட வேளாண் இயந்திரம் பொருட்கள் பார்வையிடும் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வு கூட்டத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. எஸ்.எஸ்.பழநிமாணிக்கம்(தஞ்சாவூர்),திரு.செ..ராமலிங்கம்(மயிலாடுதுறை),சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. துரை,சந்திரசேகரன் (திருவையாறு), திரு. க.அன்பழகன் (கும்பகோணம்), திரு.டி.கே.ஜி.நீலமேகம்(தஞ்சாவூர்), திரு. பூண்டி கே.கலைவாணன் (திருவாரூர்), திரு. க.அண்ணாதுரை(பட்டுக்கோட்டை), திரு. அசோக்குமார்(பேராவூரணி). மாநில பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத் தலைவர் திரு.எஸ். கல்யாணசுந்தரம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஏனாதி. பாலு, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர். குமார், விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று துறை இயக்குனர் திரு. சுப்பையா, வேளாண் பொறியியல் துறையின் தலைமைப் பொறியாளர் திரு. முருகேசன், மாவட்ட வருவாய் அலுவலர் திரு. ஆரவிந்தன், இணை இயக்குநர் வேளாண்மை திரு ஜஸ்டின் மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர் என்பதை தஞ்சாவூர் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தெரிவித்தார்.

செய்தி நிருபர் தஞ்சை டுடே